உயிரிழந்த தாய்க்கும், அவரை கொலை செய்த மகனுக்கும் மனநல பிரச்சனை இருப்பதாக தகவல்.
இந்தியாவில் பெற்ற தாயை மகன் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் 50 வயதான மினி.
இவரை குடும்பத்தினர் கைவிட்டதால் முதியோர் காப்பகத்தில் வசித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று மினியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அவரது மகன் ஜோமோன் (25) காப்பகத்திற்கு வந்தார்.
அதைத்தொடர்ந்து ஜோமோன் இரு சக்கர வாகனத்தில் மினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.அப்போது திடீரென நடுவீதியில் வாகனத்தை நிறுத்திய ஜோமோன் தாயை கீழே இறங்க சொன்னதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினார்.
மார்பு மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்திய நிலையில் இரத்த வெள்ளத்தில் மினி கீழே விழுந்து உயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஜோமோனை கைது செய்தனர்.
கைதான அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையில், கொல்லப்பட்ட மினிக்கும் அவர் மகனுக்கும் சில மனநல பிரச்சனைகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.