பேராதனை பல்கலைக்கழகம் விடுத்துள்ள எச்சரிக்கை

0
109

பேராதனை பல்கலைக்கழக(university of peradeniya)த்தில், பல்வேறு பாட நெறிகள் இணைய வழியில் இலவசமாக கற்பிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு பரப்பப்படும் போலியான தகவல்களை பேராதனை பல்கலைக்கழகம் நிராகரித்துள்ளது.

இவ்வாறு செய்யப்படும் விளம்பரங்கள் பேராதனை பல்கலைக்கழக இணைய தளத்திலிருந்து செய்யப்பட்டவை அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.

இலவச கற்கை நெறிகள் பற்றிய எவ்வித தகவல்களும்
பேராதனை பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இவ்வாறான இலவச கற்கை நெறிகள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச கற்கை நெறிகள் ஆரம்பிக்கும் உத்தேசம் இல்லை
இவ்வாறான எவ்வித இலவச கற்கை நெறிகளும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் தற்போதைக்கு அவ்வாறு ஆரம்பிக்கும் உத்தேசம் இல்லை எனவும் பல்கலைக்கழகத்தின் பிரதி துணை வேந்தர் பேராசிரியர் டெரென்ஸ் மதுஜித்(Terence Madhujit) தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான போலி செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம் என அவர் மக்களிடம் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here