தென்னிலங்கையின் பெலியத்தை நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல அரசியல்வாதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அபே ஜனபல பக்ஷய கட்சியின் தலைவரான சமன் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது
கடந்த பொதுத் தேர்தலின் போது சிங்கள பௌத்த வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய இக்கட்சி, இறுதியில் ஒரு தேசியப் பட்டியலைப் பெற்றுக் கொண்டது
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இக்கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் சமன் பெரேரா ஆகியோருக்கு இடையில் கடும் சர்ச்சையும் மோதல்களும் ஏற்பட்டிருந்தது.
பின்னர் குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக அதுரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
அபே ஜனபலய கட்சியின் தலைவர் சமன் பெரேராவுடன் பயணித்த மேலும் நால்வர் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.
மேற்படி இந்த கொலைகளுக்கு காரணமான துப்பாக்கிதாரர்களை தேடி போலீசார் வலைவிரித்துள்ளனர்.