பொகவந்தலா நகரில் பாதுகாப்பு வேலி அமைத்தமை குறித்து பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

0
169

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற நகரங்களில் மிகவும் பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் இடமாக பொகவந்தலா நகரம் காணப்படுகின்றன. இந்த நகரம் காடந்த காலங்களில் அபிவிருத்தி செய்யப்படாமையினால் இந்த நகரத்திற்கு வரும் தோட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்ளுக்கு முகம் கொடுத்தனர். பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் நகரத்தின் வீதிகள் அகலப்படுத்தப்பட்டு காபட் இட்டு அபிவிருத்தி செய்ததுடன் கால்வாய்களும் அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டன. இந்நிலையில் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண ஆளுநரின் சுமார் 20 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகின்றன. குறித்த பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பாக பொது மக்கள் அரசாங்கத்திற்கும் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் நோர்வூட் பிரதேச சபைக்கு நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்….

ஆயிரக்கணக்காக பொது மக்கள் ஒன்று கூடும் பொகவந்தலா நகரம் கடந்த காலங்களில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது குறித்த நகரத்தில் மக்கள் நடப்பதற்கு கூட பொதுமான அளவு இடம் இருக்கவில்லை இந்நிலையில் இந்த நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது அத்தோடு தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகின்றன இதனால் பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் செல்வதற்கும் பொது மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கும் வசதியாக இருப்பதோடு விபத்துக்களும் தவிர்க்கப்படும் இது குறித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி கருத்து தெரிவிக்கையில்.

நோர்வூட் பிரதேசசபைகுட்பட்ட பகுதியில் உள்ள நகரங்களில் பொகவந்தலா ஒரு முக்கியமான நகரம்.இதனை அபிவிருத்தி செய்வதற்காக நான் ஐந்து வருட் வேலைத்திட்டத்தில் இதனை முன்னெடுத்தேன் கடந்த வருடம் இந்த நகரத்திற்கு காபட் இடப்பட்டது. அப்போது அரைவாசி மாத்திரம் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது அதனை தொடர்ந்து ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்பரைக்கமைய மத்திய மாகாண ஆளுநர் அவர்களின் 20 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் தற்போது முழுமையாக பாதுகாப்பு வேலை அமைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here