நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அம்மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,477 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பொகவந்தலாவ – 34
திம்புள்ள – பத்தன – 04
ஹங்குராந்கெத்த – 11
கொத்மலை – 04
மஸ்கெலியா – 02
மதுரட்ட – 07
நோர்வூட் – 05
பூண்டுலோயா – 02
தலவாக்கலை – 01
வலப்பனை – 02
வட்டவளை – 20