நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதி ரவி குழந்தை அவர்களின் வேண்டுக்கோளுக்கினங்க இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கமைய மத்திய மாகாணசபை உறுப்பினரின் பன்முகபடுத்தபட்ட நிதியில் இருந்து பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்திற்கான வீதியினை காப்பட் ஈடுவதற்கான தீர்மானம் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் மானது 01.05.2018.வெள்ளிகிழமை பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டபகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதி ரவி குழந்தைவேல் குறித்த தோட்டமக்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பிரதேசசபையின் ஊடாக இடம் பெற்ற அபிவிரத்திகள் குறைந்தளவிலே காணபட்டது ஆகையால் முதற் கட்டமாக பொகவந்தலாவ நகரத்தில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு வீதிஅபிவிருத்தி அதிகாரசபையிடம் கேட்டு கொண்டதற்கு அமைவாக இந்த முதற் பணி வெற்றிகரமாக இடம் பெற்றது மழைகாலங்களில் பொகவந்தலாவ நகரத்தில் உள்ள வர்த்தகர்கள் குறித்த கால்வாய்களினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிய வந்தமை குறிப்பிடதக்கது.
அதன் இரண்டாம் கட்டமாகத்தான் பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்திற்கான வீதியினை காப்பட் ஈடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதி ரவி குழந்தைவேல் மேலும் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)