பொகவந்தலாவ நகரிலும் பாரிய போராட்டம் முன்னெடுப்பு.

0
131

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் நாட்டின் ஏற்பட்டுள்ள பொருட்களின் தட்டுபாடு நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக கோரி இன்று பொகவந்தலாவ நகரில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் பொகவந்தலாவ, டின்சின், கெம்பியன் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்கள், நகர வர்த்தகர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததோடு, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பொகவந்தலாவ ஹோலிரோஸ்சரி மகா வித்தியாலயம் வரை பேரணியாக சென்றது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வங்கிகள், தனியார் பஸ்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் என பலரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here