பொகவந்தலாவ பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீடிர் தீ

0
345

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் நிருத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்று திடிர்
என தீபற்றியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 11.01.2019 வெள்ளிகிழமை இரவு 08.30மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த தோட்டபகுதி ஒன்றில் நிறுத்திவைக்கபட்ட மோட்டார் சைக்கில் திடிர்
என தீ பற்றியதால் பிரதேச மக்கள் ஒன்றினைந்து தீயினை கட்டுபாட்டுக்குள்
கொண்டுவந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு
அறிவிக்கபட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு வருகை தந்த பொலிஸார்
விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் இந்த மோட்டார் சைக்கிலுக்கு இனந்தெரியாதவர்களால் தீ
வைக்கபட்டதா அல்லது மோட்டார் சைக்கிலில் ஏற்பட்ட கோளாரு காரணமாக தீ
பற்றியுள்ளதாக என விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் ஆரம்பித்துள்ளதோடு
குறித்த மோட்டார் சைக்கில் ஐந்து இலட்ச்சம் பெறுமதியினை கொண்டது எனவும்
தெரிவித்தனர்.

DSC07277 DSC07278 DSC07279

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here