பொகவந்தலாவை செய்தியாளர் அச்சுறுத்தல்; விசாரணையில் பொலிஸார் அசமந்தம்” பொலிஸ் மா அதிபருக்கு மீள் முறைப்பாடு!

0
202

பொகவந்தலாவ பிரதேச ஊடகவியலாளர் கடந்த 02ம் திகதி ஞாயிற்றுகிழமை பொகவந்தலாவ கிவ் தோட்டபகுதிக்கு செய்தி கேரிக்க சென்ற வேலை மத்திய மாகாணசபை உருப்பினர் ஒருவரால் குறித்த ஊடகவியலாளர் அச்சுருத்தபட்டு ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூரு விளைவித்த தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தமை தொடர்பில் பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு பொகவந்தலாவ பொலிஸாரால் எந்த நடவடிக்கையூம் மேற்கொள்ள பாடாமை குறித்து குறித்த ஊடகவியலாலரால் பொகவந்தலாவ பொலிஸாருக்கு எதிராக பொலிஸ்மா அதிபர்
பூஜித்த ஜயசுந்தரவிடம் தொலைநகல் முலமாக முறைபாடு செய்யபட்டுள்ளது இந்த முறைபாட்டினை 08.09.2018. சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 02ம் திகதி ஞாயிற்றுகிழமை பொகவந்தலாவ கிவ்தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியில் 70தனி வீட்டுத்திட்டத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வை செய்தி சேகரிக்க சென்ற பொகவந்தலாவ பிரதேச ஊடகவியலாளரை மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவர் அச்சுருத்தியமை மற்றும் ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கடந்த 02ம் திகதி மாலை 03.45மணி அளவில் முறைபாடு பதிவூ செய்யபட்டது முறைபாடு பதிவூ செய்யபட்டு 08நாட்கள் கடந்துள்ள நிலையில் இதவரையிலும் ஊடகவிலாளலரால் முறைமாட்டுக்கமைய குறித்த மத்திய மாகாண சபை உறுப்பினரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணை மேற்கொள்ள பொகவந்தலாவ பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை குறித்து குறித்த ஊடகவியலாளர் பொலிஸ் மா அதிபருக்கு இந்த முறைபாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் கவனம் செலுத்தபட வேண்டுமென அந்த முறைபாட்டில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here