பொகவந்தலாவையில் 14 வயது மாணவி தாய்மையானார்; காரணமானவரை கைது செய்ய முடிவு!

0
132

பொகவந்தலா குயினா பகுதியில் 14 வயது மாணவியொருவர் கர்ப்பமடைந்திருப்பதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாடு ஒன்றையடுத்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேற்படி மாணவியின் உடல்நிலை மாற்றத்தை கண்ட ஒருவர் 119 அவசர  சேவைக்கு அழைத்து செய்த முறைப்பாட்டையடுத்து மேற்படி சிறுமியை அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியை சேர்ந்தவர் எனவும் சகோதர உறவுமுறையை கொண்டவர் எனவும் மேற்படி சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி சிறுமியை வைத்தியசாலையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதோடு சம்பந்தபட்ட இளைஞனை கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொகவந்தலாவ நிருபா்
எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here