பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மேற்பிரிவை சேர்ந்த சின்னபையன் நிரஞ்சன் என்ற குடும்பஸ்த்தரை காணவில்லை என அவரின் உறவினர்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த குடும்பஸ்த்தர் தனது மனைவியின் வீடான பொகவந்தலாவ எல்பட தோட்டபகுதிக்கு சென்று இருந்த நிலை இரவு உணவு உட்கொண்டு வீட்டில் இருந்தவரை தீடிர்ரென காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் பதியபட்டுள்ள முறைபாட்டில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த குடும்பஸ்த்தர் கடந்த மூன்று நாட்களாக கானவில்லையெனவும் தெரிவிக்கபடுகிறது.
இந்த குடும்பஸ்த்தர் 34வயதுடைய சின்னபையன் நிரஞ்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர் தொடர்பாக குறித்த நபரை இனங்கண்டால் தகவல் வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கபட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)