பொகவந்தலாவையில் திருப்பலி பூஜையின் பின்னர் வழங்கப்பட்ட பொரித்த மீன் விஷமானது; 80பேர் பாதிப்பு!

0
165

பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் உள்ள கிரிஸ்தவ ஆலயம் ஒன்றில் இடம் பெற்ற திருப்பலி திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதானத்தில் உணவு ஒவ்வாமை காரனமாக 80பேர் வாந்தி மற்றும் வயிற்றோட்ட காரணமாக பாதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரீசோதகர் கதிரவேல் ஜெயகனேஸ் தெரிவித்தார்.

01

இந்த சம்பவம் 27.11.2017 திங்கள் கிழமை இடம் பெற்றது 26.11.2017. ஞாயிற்றுகிழமை குறித்த தோட்டத்தில் உள்ள கிரீஸ்த்தவ ஆலயம் ஒன்றில் இடம் பெற்ற திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதானத்தில் பொரித்த மீன் உண்பதற்கு உகந்ததாக இல்லை என தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டத்தில் உள்ள 80பேர் பாதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்களால் ஆரம்பிக்கபட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

02

இதேவேளை பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் உள்ள கிருஸ்தவ ஆலயத்தில் வழங்கபட்ட அன்னதானத்திற்கு சுகாதார பரீசோதகர் காரியாலயத்தில் அனுமதி கூறப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர் கதிரவேல் ஜெயகனேஷ் மேலும் தெரிவித்தார்.

06

உணவு ஒவ்வாமையின் காரணமாக பாதிக்கபட்டவர்களுள் 15 பேர் பொகவந்தலாவ மாவட்டவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுசென்றுள்ளதுடன் நான்கு பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் பொகவந்தலாவ தோட்டவைத்தியசாலையில் 10 பேர் மருந்து பெற்று சென்றுள்ளதோடு மேலும் 20பேர் டிக்கோயா கிழங்கன் மாவட்டவைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் மருந்து பெற்று கொண்டு சென்றுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

08

இதேவேளை ஆலயநிர்வாகத்தின் மீது 08.12.2017 அன்று அட்டன் நீதவான் நிதிமன்றில் வழங்கு தொடரஉள்ளதாகவும் பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரீசோதகர் கதிரவேல் ஜெயகனேஸ் மேலும் குறிப்பிட்டார் .

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here