பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 45 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.
நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ, கேர்கஸ்வோல், கெம்பியன், நோர்வூட் ஒன்சி, கொட்டியாகல ஆகிய தோட்டங்களில் இருந்தே புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களே புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 12 கொவிட் மரணங்களும் 504 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.