பொடி மெனிக்கே புகையிரதத்தில் மோதி ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்த்தர் ஒருவர். உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் இன்று (15) திகதி பகல் கொட்டகலைக்கும் தலவாக்கலைக்கும் இடையில் சென்கிளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது,
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று காலை புறப்பட்டு வந்த புகையிரதத்திலே குறித்த நபர் மோதுண்டுள்ளதாகவும், இவரது சடலம் கொட்டகலை புகையிரத நிலையத்தில் ஒப்படைத்து புகையிரதம் புறப்பட்டு சென்றதாகவும் புகையிரத நிலைய உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ரோமகிருஸ்ஷன் மோகனசுந்தரம் கொட்டகலை என்ரூ தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடையவரென பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் கொழும்பு சென்று நாளை வருவதாக மனைவியிடம் தெரிவித்ததாகவும் அதனை தொடர்ந்து இன்று தனது சகோதரர் ஒருவரிடம் தொலைபேசியில் அழைத்து குடும்ப தகராறு காரணமாக தான் புகையிரததிற்கு பாய்ந்து தற்கொலை செய்வதாக தெரிவித்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம், க.கிஷாந்தன்