‘பொப் மாலி‘ கைதுசெய்யப்பட்டார்.

0
174

பாரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியிலிருந்து செயற்பட்ட பிரதான சந்தேகநபராக கருதப்படும் ‘பொப் மாலி’ என அறியப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேருவளை கடற்பரப்பில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம்திகதி 288 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் களுதுர சமிந்த தாப்ரூவ் என்ற இயற்பெயரை உடைய, ‘பொப் மாலி’ என்றழைக்கப்படும் நபரே பிரதான சூத்திரதாரியாக இருந்து செயற்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இந்நிலையில், இந்நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்ததன் விளைவாக அவரை கைதுசெய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here