பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுட்டு சம்பவத்திக்கு உதவிய சந்தேக நபர் நேற்று (09) வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிக்கவெரட்டியவைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் அவரிடமிருந்து 15 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் பொரளை பொலிஸார் மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.




