போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூர்வதற்காக அட்டனில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் – ஈரோஸ் அமைப்பு தெரிவிப்பு!!

0
215

மலையக மக்களின் உரிமைக்காகவும், மண்ணுக்காகவும் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூர்வதற்காக ஈரோஸ் அமைப்பு மே 5ம் திகதி முதல் 11ம் திகதி வரையிலான 7 நாட்கள் கொண்ட ஒரு வாரத்தில் மலையக தியாகிகள் வாரமாக பிரகடனப்படுத்துகின்றது என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா. ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று 04.05.2018 அன்று அட்டன் டைன் விருந்தகத்தில் மாலை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஈரோஸ் அமைப்பு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மே 11ம் திகதியை மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வந்துள்ளது.

மே 5ம் திகதி முதல் 10ம் திகதி வரையிலான காலங்களில் மலையக தியாகிகள் நினைவாக கருத்தமர்வுகள், கலந்துரையாடல்கள் என்பன நடைபெற்று மே 11ம் திகதி பிரதான நினைவேந்தல் நிகழ்வு அட்டன் நகரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இந்த காலகட்டங்களில் தியாகிகள் வாழ்ந்த ஊர்களில் உள்ள இளைஞர்கள், பொது மக்கள் போன்றோர் எமது இருப்புக்கான போராட்டத்தில் வீர மரணமடைந்த இந்த தியாகிகளை நினைவுகூர்ந்து நிகழ்வுகளை நடத்துமாறும், அத்தோடு மலையகத்தில் உள்ள அனைத்து அரசியல், தொழிற்சங்க, சமூக அமைப்புகளையும், சமூக பற்றாளர்களையும் இதற்கு ஈரோஸ் அமைப்பு அழைப்பு விடுக்கின்றது என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here