போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ஊடுருவிய ரஷ்ய ட்ரோன்

0
43

போலந்தை தொடர்ந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ருமேனியாவிலும் ரஷ்ய ட்ரோன் ஊடுருவிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், போலந்து வான்வெளியில் ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்தன. இதனை அந்நாட்டு இராணுவம் சுட்டு வீழ்த்தியது. போலந்து வான்வெளியை பாதுகாப்பதற்கு உதவும் வகையில் ரபேல் விமானங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்தது.

இந்நிலையில் ருமேனிய வான்வெளியிலும் ரஷ்ய ட்ரோன் அத்துமீறி நுழைந்துள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. இதனை போர் விமானங்கள் மூலம் கண்காணித்ததாகவும், உக்ரைனின் எல்லை அருகே இந்த ட்ரோன் காணப்பட்டதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

சிலியா வெச்சே பகுதியில் முதலில் காணப்பட்ட இந்த ட்ரோன் பிறகு ரேடாரில் இருந்து மறைந்து விட்டதாகவும், அதேநேரத்தில் மக்கள் நிறைந்த பகுதிகளில் இந்த ட்ரோன் காணப்பட்டதாகவும், அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் இந்த ட்ரோன் தவறுதலாக ருமேனியாவிற்குள் நுழைந்து இருக்காது என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here