போலி வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி ஆடை விற்பனை

0
205

போலியான சர்வதேச வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி டி-சர்ட்கள், டெனிம் பேன்ட்கள் போன்றவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் இடத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை மேற்கொண்டுள்ளது.

மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் புறக்கோட்டை பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.இணையதளம் மூலம் நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு இவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்தக் கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் மேல் மாகாண உதவிப் பணிப்பாளர் பிரதீப் களுத்தற ஆராச்சி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here