மலையக மக்கள் முன்னணி ஸ்தாபிப்பதற்கு முன்னின்று செயற்பட்டவரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாகவும் ஆரம்பகாலங்களில் செயற்பட்ட எஸ். விஜயகுமாரின் பதினோராவது நினைவு தினம் மலையக மக்கள் முன்னணி ஹட்டன் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது ம.ம.முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன்,பிரதி தலைவர் அ.லோரன்ஸ்,மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் கே.சுப்ரமணியம்,மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட கட்சி முக்கியஸ்தர்ள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த்