மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து காயப்படுத்திய தந்தை- பண்டாரவளையில் சம்பவம்

0
95

பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து காயப்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவர் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக லியன்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையாகும்.

பண்டாரவளை அம்பதந்தேகம பிரதேசத்தின் லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7ஆம் வகுப்பு பாடசாலை மாணவியின் முகம் தீக்குச்சியால் எரிக்கப்பட்ட நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் தாயார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு 6 வயதுடைய சகோதரியொருவர் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி சமையலறை குழாய்க்கு அருகில் கைகளை கழுவிக் கொண்டிருந்த போது தந்தை சிறுமியை திட்டி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

தீக்காயங்களுடன் குறித்த மாணவி பாடசாலை சென்ற நிலையில், சிறுமியின் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதை அதிபர் அவதானித்துள்ளார்.

உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தந்தை பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபபடவுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here