இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு இன்று மலையக சிவன் ஆலயங்களிலும் ஏனைய இந்து ஆலயங்களில் பல்வேறு நிழ்வுகள் இடம்பெற்றன.
நேற்று காலை முதல் எல்லாம் வல்ல அனைத்தையும் உணர்த்தும் சிவலிங்கப்பெருமானுக்கு நான்கு சாம பூஜைகள் இடம்பெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
முதலாம் சாம பூஜை நேற்று (01) ஏழு மணியளவில் ஆரம்பமாகின இந்த விசேட பூஜை சிவன் ஆலயங்களிலும் ஏனைய ஆலயங்களிலும் மிக சிறப்பாக இடம்பெற்றன.
நுவரெலியா மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தலவாக்கலை கதிரேசன் தேவஸ்தானத்தில் முதலாம் சாம பூஜை 6.30 ஆரம்பமாகியது.
இதில் சிவலிங்கத்திற்கு பால் தேன் தையிர், பஞ்சாமிர்தம், விசேட திரவிய அபிசேகம் நடைபெற்று 108 வில்வ இலையால் அர்ச்சினை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்ப்பட்டது.சிவராத்திரி விழாவினை சிறப்பிக்கும் முகமாக கதிரேதசன் மண்டபத்தில் பக்திபாடல் இசைக்கச்சேரி ஒன்றும் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு மு.பிரசாந்தசர்மா குருக்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் சுகாதார பொறிமுறைகளுக்கு அமைய மட்டுப்பட்ட பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
மலைவாஞ்ஞன்