மகாவலி ஆற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தாய் ஒருவரின் சடலமே இவ்வாறு ஆற்றில் மிதந்து வந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
84 வயதான வயதான மூதாட்டி ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 அம் திகதியிலிருந்து தனது தாயை காணவில்லை என மகள் நாவலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் தாயாரின் சடலம் ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.