மகேஷ்பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படப்பிடிப்பில் எதிர்பாராத சிக்கல்

0
1
dailythanthi

‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படங்களை தொடர்ந்து ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகி வரும் புதிய படம், ‘வாரணாசி’. மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ.1,000 கோடி என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் சில முக்கிய காட்சிகள் நீருக்கடியில் படமாக்கப் பட இருக்கின்றன. இதையொட்டி ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்துக்காக 150 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கோரப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கடும் வெப்ப அலை காரணமாக, தண்ணீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் படப்பிடிப்புக்கு இவ்வளவு தண்ணீர் தரமுடியாது என ஐதராபாத் குடிநீர் வாரியம் மறுத்துள்ளது. இதையடுத்து வேறு என்ன மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்கலாம்? என படக்குழு யோசித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here