மக்களுக்கு அரசியல் யாப்பா ? அல்லது அரசியல் ஆப்பா ? அட்டனில் ஆர்ப்பாட்டம்

0
176

2015ம் ஆண்டு நல்லாட்சியில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுத்த பொழுது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறையை இல்லாதொழித்து சாதாரண ஜனாதிபதியாக மக்களின் நன்மதிப்பை பெறுவேன் என்று தெரிவித்த ஜனாதிபதி இன்று அவரின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துவுள்ளார்.அன்று கூறியது போல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து சாதாரண ஜனாதிபதியாக செயல்பட அரசியல் அமைப்பில் மாற்றம் ஒன்று கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அட்டனில் 10.12.2018 அன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக இளைஞர் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைதியான முறையில், பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

DSC00140

இலங்கை நாட்டில் அரசியல் நிலைமை ஒரு குழப்பகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டில் அமைச்சரவை மற்றும் பிரதமர் இல்லை. எனவே இதற்கு உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.

 

க.கிஷாந்தன், sathish

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here