மக்கள் செல்வாக்கு இருந்தால், மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் – சவால் விட்டார் சஜித்!

0
12

கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அரசாங்கம் இவ்வளவு மக்கள் செல்வாக்கு பெற்றுள்ளோம் என்று கருதினால், மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன். குழுக்கள், தெரிவுக் குழுக்கள் என்று பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி, மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறேன். அரசாங்கத்திற்கு 65% மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கூட்டுறவு வாக்குகளை கருத்திற் கொள்வதில்லை என்றால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

🟩 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அவசியம்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் காணப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கிறேன். அதை நேரடியாகவே தெரிவிக்கின்றேன். உலகின் ஜனநாயக நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது ஊழல் மற்றும் இலஞ்சத்தை குறைத்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையிலாகும். இவர்களினது பதவிக்காலம் முடிந்த பின்பு இவர்களுக்கு ஒருவகையில் சமூக பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதும் இதில் ஒரு அம்சமாக அமைந்து காணப்படுகின்றன. இந்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுதியாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 பாராளுமன்ற உறுப்பினர்களினது ஓய்வூதியம் தொடர்பில் ஆராயும் அரசாங்கம் சிரேஷ்ட பிரஜைகளினது ஓய்வூதியத்தையும் நீக்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து அக்கறை காட்டும் அரசாங்கம், 7 இலட்சத்து 50 ஆயிரம் ஓய்வு பெற்றவர்களின் ஊதியங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவற்றதாக காணப்படுகின்றன. பி.சி. பெரேரா குழுவின் பரிந்துரைப்படி அரச ஊழியர்களுக்கு 60% சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதில் ஆசிரியர், அதிபர், ஆலோசகர் சேவைகளுக்கு அது வழங்கப்படாமல் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது. சுபோதனி குழுவின் 20% அதிகரிப்பு 2022 ஜனவரி 1-ஆம் திகதியிலிருந்து பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால், ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. ஜனாதிபதி ஓய்வூதியர்கள் தேசிய மாநாட்டில் இந்த பிரச்சினைகளை தீர்த்துத் தருவேன் என்று கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2025-2027 சம்பள அதிகரிப்பு செய்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்ற 1 இலட்சத்து 54 ஆயிரம் பேருக்கு எந்த நிவாரணமும் இல்லை. 2025 ஏப்ரல் 1-க்கு முன் அதாவது, ஜனவரி-மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகள் கிடைத்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு சரிசெய்யப்படாமல் போனதால் அவர்கள் கஷ்டத்தில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். 10,000 சம்பள அதிகரிப்பை ஓய்வூதியத்தில் இணைக்கும் செயல்முறையை கோட்டாபய அரசாங்கம் இரத்துச் செய்த பிறகு, இந்த அநீதியை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லாமல் பல ஓய்வூதியர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

🟩 அரசாங்கத்திற்கு 76 ஆண்டுகள் சாபமாக இருந்தாலும், நாட்டிற்கு நன்மையே விளைந்தது.

76 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று அரசாங்கம் கூறினாலும், 30 ஆண்டு மகாவலி திட்டத்தை 5 ஆண்டுகளில் நிறைவுபடுத்தியமை, இலவச கல்வி, இலவச சுகாதாரம், தேசிய நலன்புரி அரசாங்கத்தை உருவாக்கியமை, குழந்தை மரணங்கள் மற்றும் தாய் சேய் மரணங்களை குறைத்து, ஆயுட்காலத்தை அதிகரித்ததை உள்ளிட்ட பல சாதனைகள் சுதந்திரத்திற்கு பிறகு நிகழ்ந்துள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

🟩 அரசாங்கம் சிரேஷ்ட பிரஜைகளினது சேமிப்புகள் மீதான 15% வட்டியையும் இல்லாமலாக்கியுள்ளது.

உணர்வுமிக்க, கரிசை காட்டும் அரசாங்கம் தான் ஆட்சியில் இருந்தால், 15 இலட்ச சிரேஷ்ட பிரஜைகள் சமூகத்தின் சேமிப்புகளுக்கு வழங்கப்பட்ட 15% வட்டியை ஏன் நீக்கினீர்கள் என்று கேள்வி எழுப்புகிறேன். அந்த வட்டி இன்றுவரை வழங்கப்படவில்லை. மின்சார கட்டணம் இன்னும் குறைக்கப்படவில்லை. 33% ஆல் மின்சார கட்டணத்தை குறைப்போம் என்று கூறியும் அது நிறைவேறவில்லை. போதாகுறைக்கு இரண்டாம் காலாண்டில் 13.56% ஆல் மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், காலி பூஸ்ஸ சிறைச்சாலையில் இருக்கும் காயமடைந்த இராணுவ வீரர்களை பனாகொடவிற்கு அனுப்ப முயற்சித்து வருகின்றது. இதுதான் இந்த மக்கள் மீது உணர்வுமிக்க அரசாங்கம் செய்யும் செயல்கள் என்று குறிப்பிட்டார்.

🟩 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்திற்கு 23 இலட்சம் வாக்குகள் குறைந்ததன.

பொதுத் தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு 23 இலட்சம் வாக்குகள் குறைந்ததன. இந்நிலையில் செய்வதற்கு சிறந்தது மாகாண சபை தேர்தலை நடத்துவதேயாகும் என்றும், குழுக்கள் அமைத்து மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்தாமல் அதனை விரைந்து நடத்துமாறும் எதிர்க்கட்சி தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here