இந்த பிரம்மாண்டமான விழாவை கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.கண்டியில் மிக பிரமாண்டமான முறையில் எம்.ஜி.ஆர் அவர்களின் 102 வது ஜனன தின விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இந்தியாவின் தமிழ்நாட்டின் அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய கலைஞர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி இலங்கையிலும் பலத்த ரசிகர கூட்டத்தை கொண்டுள்ள எம்.ஜி.ஆரின் அனைத்து ரசிகர்களும் திரண்டுவரும் வகையில் இந்நிகழ்வு மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் கண்டியின் பூர்விக வரலாற்றை கொண்டுள்ள எம்.ஜி.ஆர் அவர்களை மீண்டும் அதே கண்டியில் அவரையும் அவரது ஞாபகங்களையும் அழைத்துவரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்த இந்த தலைமகனை எளிதில் மறக்கமுடியுமா?
ஒரு நடிகன் , ஒரு ஸ்டார் , தன்னை ரசிகர்கள் எப்படி திரையில் பார்கிறார்களோ அப்படியே நிஜ வாழ்விலும் இருக்க முடியுமா என்கிற கேள்விக்கு பல விதமான பதில்களை பார்த்திருக்கலாம் .
எமக்கு தெரிந்து இதை விட இயல்பாக எவரும் பதில் அளித்திருக்க முடியாது. இதை விட இயல்பாக எவரும் பதில் அளித்திருக்க முடியாது. அவ்வாறு பதில் அளிக்க முடியாமல் போவதற்கு காரணம் , அவர்கள் திரைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே வைத்திருக்கும் இடைவெளி என்பது மிகவும் அதிகம் என்பதால் தான் ….
ஜூலை 1978 ம் ஆண்டு வெளி வந்த இந்தியா டுடே பத்திரிக்கையில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் பேட்டி … அதில் அவர் இவ்வாறு கூறுகிறார் ….
கேள்வி : அரசியல் பிரசாரத்துக்கு , நீங்கள் சினிமாவை பயன்படுத்துகிறீர்களா ?
மக்கள் திலகம் பதில் : ‘ ஆம் நிச்சயமாக , எனது திரைப் படங்களில் கதைகள் மூலமாகவும் எனது கொள்கைகளையும் திட்டங்களையும் விளக்குகிறேன் .
கேள்வி : ஆனால் , அதில் வேறுபாடுகள் இருப்பதாகவும் , படங்களில் நடிப்பது போல் உண்மையில் நீங்கள் இல்லை என்று கூறப் படுகின்றதே ?
மக்கள் திலகம் பதில் : ‘ எந்த ஒரு மனிதனும் தான் எப்படி வாழ நினைக்கிறானோ அதையே செயல் படுத்தி வாழ்வது என்பது இயலாத காரியம்.ஆனால் , அவன் எப்படிப் பட்டவன் என்பதை நிச்சயம் மக்கள் நன்கறிவார்கள் .
நான் எதை படத்தில் சொல்கின்றேனோ , அதை நான் கடைபிடிக்கவில்லை , அப்படி உண்மையில் செயல்படவில்லை என்றால் நீண்ட காலத்துக்கு முன்பே பொது மக்கள் என்னை புறக்கணித்திருப்பார்கள் .
உண்மையில் நான் எப்படி இருக்கின்றேனோ , அப்படியே தான் சீராகவும் நேர்த்தியாகவும் திரைப் படங்களில் தோhன்றிவருகிறேன் . நான் இப்படிச் சொல்கிறேன் என்பதற்காக ‘ ரிக்ஷாகாரனாகவும் , சுரங்கத் தொழிலாளியாகவும் நடிக்கிறீர்களே !
அப்படியா நீங்கள் வாழ்கிறீர்கள் ?’ என்று நீங்கள் என்னை கேட்பீர்களேயானால் எனது பதில் எதிர்மறையாகத் தானிருக்கும் ஆனாலும் கூடிய அளவில் மிகவும் எளிமையாகவே வாழ்ந்து வருகிறேன் …. அருமை அருமை…..
இவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக மாறிப்போனாலும் முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சாரும்.
ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார்.
தனது மனிதநேய பண்புகளால், அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமான எம.ஜி.ஆர் அவர்களையும் அவரது ஞாபகங்களையும் இலங்கைக்கு கொண்டுவருவதில் இலங்கை மக்களும் பெருமையடைந்து கொள்ளலாம்.
எனவே இம்மாதம் 16 ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முக்கிய நாளாக பதியப்படப்போகின்றமை பெருமைக்குரிய விடயமாகும்.கண்டி மாநகரத்திற்கு இந்த பிரம்மாண்டமான விழாவில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.