மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் புதிய மைல்கல்

0
15

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றிலும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலும் முதன்முறையாக குறித்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 வயதான ஒருவருக்கே குறித்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு இடப்புற கரோட்டிட் எண்டார்டெரெக்டமி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியர் நதுன் மொஹோட்டி மற்றும் அவரது குழுவால் குறித்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here