மட்டக்குளியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு – இளைஞன் வெட்டி கொலை

0
199

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு மட்டக்குளி பொலிஸார் விரைந்தனர்.

இதன்போது வெட்டுக்காயங்ககுள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here