இவ்வருடம் அரச வெசாக் விழா மாத்தளை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
இதன்படி மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மே 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் மதுபான நிலையங்கள் மூடப்படுமெனவும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்களும் குறித்த நாட்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.