மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் இந்த ஆண்டு வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 FIFA ஆண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்கா (United States) மற்றும் ஈரான் (Iran) இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய கால்பந்து கூட்டமைப்புத் தலைவர் Mehdi Taj, தமது நாடு போட்டியில் பங்கேற்பது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் போரின் போது ரஷ்யாவிற்குத் தடை விதித்தது போல, போட்டியை நடத்தும் நாடான அமெரிக்காவிற்கு எதிராக FIFA எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




