மத்திய மலைநாட்டில் சில தினங்களாக நீரற்ற காலநிலை தொடர்ந்த வண்ணம் உள்ளன.மலையுடனான காலநிலையுடன் கடும் காற்றும் வீசுகிறது சில பகுதிகளில் கடும் காற்று காரணமாக மரத்தின் கிளைகள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
நுவவரலியா மாவட்டத்தில் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகின்றன.வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் பனி மூட்டம் காணப்படும் வேளையில் தங்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு தங்களுக்கு உரிதான பக்கத்தில் பயணிப்பதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் அறிவுத்த உள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மழையுடனான கால நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளன இரவு நேரங்களில் மழையுடன் கடும் காற்றும் வீசுகின்றன.
எனவே மரங்களுக்கு சமீபமாக இருப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன எனவே அபாயம் நிறைந் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மலைவாஞ்ஞன்