மனைவியை கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்த கணவன்-புதைக்க உதவிய மகனும் கைது

0
259

அயல் வீட்டில் வசிப்பவர்கள் பெண் தொடர்பாக விசாரித்த போது, அவர் கொரோனா தொற்றில் உயிரிழந்து விட்டதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
50 வயதான பெண்ணை தாக்கி கொலை செய்து வீட்டுத் தோட்டத்தில் புதைத்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவன் மற்றும் மூத்த மகனை ரிதிமாலியேத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கி கொலை செய்து, தந்தையும் மகனும் இணைந்து வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

அயல் வீட்டில் வசிப்பவர்கள் பெண் தொடர்பாக விசாரித்த போது, அவர் கொரோனா தொற்றில் உயிரிழந்து விட்டதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

ரிதிமலியேத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 10 ஆம் திகதி பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது.சந்தேக நபரான கணவனுக்கு மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் கணவன் தாக்கியதால் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான பெண்ணின் கணவரான 70 வயதான நபரும் அவர்களின் 26 வயதான மூத்த மகனையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேக நபரான கணவன், மனைவியை தாக்கி கொலை செய்த பின்னர்,மகனின் உதவியுடன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரிதிமாலியேத்த யகடஹல்பொல பிரதேசத்தில் வசித்து வந்த 50 வயதான டப்ளியூ.எம்.சோமாவதி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து ரிதிமாலியேத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here