மனைவியை கொலை செய்துவிட்டு தவறான முடிவெடுத்த கணவன்! மிஹிந்தலையில் அதிர்ச்சி

0
52

மிஹிந்தலை, குஞ்சிக்குளம் பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் அடித்து கொலை செய்துவிட்டு கணவன் உயிர்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் (07-09-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் மிஹிந்தலை, குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 06-09-2024 ஆம் திகதி இரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் உயிர்மாய்த்து கொண்டதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here