சீனாவில் இருந்து ஜப்பான் நோக்கிய 191 பயணிகளுடன் பயணித்த விமானம் திடீரென தாழ்வாக பறக்க தொடங்கியதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் 737 பயணிகள் விமானம் 10 நிமிடங்களில் 26,000 அடி உயரத்தில் இருந்து 10,500 அடி உயரத்திற்கு விரைவாக கீழ் இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 737 விமானம், கடந்த திங்கட்கிழமை சீனாவின் ஷாங்காயிலிருந்து ஜப்பானின் டோக்கியோவிற்கு பறந்து கொண்டிருந்தபோது, 36,000 அடி உயரத்தில் இருந்து 10,500 அடி உயரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது.
இதனால் விமானத்தின் உட்புற அழுத்தம் குறைந்து, அதில் பயணித்த 191 பயணிகளுக்கு கடுமையான அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.
சமூக ஊடகங்களில் வைரலான காணொளிகளில் கிட்டத்தட்ட அனைத்து பயணிகளும் ஒக்ஸிஜன் முகமூடிகளை அணிந்திருப்பதைக் காணமுடிந்தது.
இதனையடுத்து, அவசரநிலை அறிவிக்கப்பட்ட பின்னர் விமானம் இறுதியில் ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இருப்பினும், விமானிகள் கன்சாய் விமான நிலையத்தில் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கினர்.
அந்த பயங்கரமான தருணத்தை நினைவு கூர்ந்த பயணி ஒருவர், “நான் ஒரு மௌனமான சத்தத்தைக் கேட்டேன், சில நொடிகளில் ஒக்ஸிஜன் முகமூடி கழன்று விழுந்தது.
விமானப் பணிப்பெண் அழுது கொண்டே ஒக்ஸிஜன் முகமூடியை அணியுமாறு சத்தமிட்டார், விமானத்தில் ஒரு கோளாறு இருப்பதாகக் கூறினார்,” என்று AP-ஐ மேற்கோள் காட்டி டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு இழப்பீடாக விமான நிறுவனம் 15,000 யென் மற்றும் ஒரு இரவு தங்குமிடத்தை வழங்கியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.