மருத்துவமனைகள் மீது தாக்குதல் – குழந்தைகள் இறந்துவிடக்கூடிய ஆபத்தில்

0
153

வடக்கு காஸாவில் அல் ஷிபா மற்றும் அல் குத்ஸ் எனும் 2 மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அந்த மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் எரிபொருளுக்கும் மருந்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதால், முன்னரே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அல் ஷிபா மருத்துவமனையை சுற்றி குண்டுகள் வீசப்படுவதாகவும் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 36 குழந்தைகள் இறந்துவிடக்கூடிய ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது.

உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துவிட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்துச்சென்ற 240 பேரும் விடுவிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here