மறைந்த பிரித்தானிய மகாராணியின் முழு சொத்து மதிப்பு தெரியுமா?

0
183

பிரிட்டனில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth), 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார்.

1952ல் அரியணைக்கு வந்த ராணி எலிசபெத்(Elizabeth), தனது பதவிகால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார்.பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, நாட்டின் ராணியாக பதவியேற்றவர் அவரது 25 வயது மகள் 2ம் எலிசபெத் (Elizabeth)ஆவார்.

70 ஆண்டுகள் ஆளுகை செய்த எலிசபெத்தின்(Elizabeth) சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலருக்கும் மேல். அவர் தற்போது இல்லை என்ற நிலையில் அவரின் சொத்துக்கள் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிரிட்டீஷ் அரசு குடும்பத்திற்கு ஆண்டுதேறும் செலுத்தப்படும் இறையாண்மை கிராண்ட் எனப்படும் வரி செலுத்துவோர் மூலம் ராணிக்கு வருமானம் கிடைக்கும். இது பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும்.

எனினும் ராணியின் வருமானம் இது மட்டும் அல்ல, இன்று உலகளாவிய வணிக சாம்ராஜ்ஜியமாக கருதப்படுகிறது. இதன் மூலம் ராணி எலிசபெத்துக்கு(Elizabeth) வருமானம் கிடைக்கிறது.

ராணி எலிசபெத்துக்கு(Elizabeth) தனிப்பட்ட முறையில் விலையுயர்ந்த ஓவிய படைப்புகள், நகைகள், ரியல் எஸ்டேட் சொத்துகள், பல முதலீடுகள் என பலவும் உள்ளன.

இதில் பெரும்பாலான சொத்துகள் இளவரசர் சார்லஸ் (King Charles)அரியணை ஏறும்போது அவருக்கு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சொத்துகளுக்கு இங்கிலாந்து சட்டத்தின் படி வரி விலக்கும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here