எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில் சிற்றுண்டிச்சாலைகளில் கொத்து ரொட்டி, மதிய உணவு மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இந்த தகவலை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் கொத்து ரொட்டியின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.