மலிவான விலையில் எரிபொருள் கொள்வனவு

0
160

ரஷ்யாவிடமிருந்து மானிய விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு மாஸ்கோவுடன் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்திய தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான முரண்பாடுகள் இலங்கையின் பரிமாற்ற நெருக்கடியில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள், நிலக்கரி, உரம் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாக இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 33% மக்களுக்கு எரிபொருள் அவசியமான காரணியாக இருப்பதாகவும் அவர் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால் எரிபொருளை பெறுவதில் இலங்கை சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் இதன் காரணமாக மானிய விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் இலங்கை நீண்டகாலமாக சிறந்த இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாகவும், சர்வதேச நியதிகள் அல்லது சட்டங்களை மீறாமல் ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here