மலையக அரசியல் தொழிற்சங்க தலைமைகள் காலம் காலமாக மக்களை ஏமாற்றி வந்துள்ளது.

0
92

ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு.
மலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் காலம் காலமாக பெருந்தோட்ட மக்களை ஏற்மாற்றி வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று 16 ம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய மக்கள் குரல் முதல் முறையாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகிறது இதற்கு காரணம் பழைய தலைமைகளான திகாம்பரம் அவர்களும் ஆறுமுகன் தொண்டமான் வழிவந்த ஜீவன் தொண்டமான் அவர்களும் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளம் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து பல முறை ஏமாற்றி வந்துள்ளார்.

திகாம்பரம் அவர்கள் நல்லாட்சி காலத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா பெற்றுத்தருவதாக அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரசிங்க அவர்களை தலாவாக்கலைக்கு கூட்டிக்கொண்டு வந்து தெரிவித்தார் ஆனால் சம்பளம் பெற்றுத்தரப்படவில்லை.பல உயிர்த்தியாகங்களையும் போராட்டங்களையும் செய்துதான் காலம் கடந்து ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டது அது சில தோட்டங்களில் முறையாக வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற பின் அதே தலவாக்கலைக்கு ஜீவன் தொண்டமான் கூட்டி கொண்டு வந்து 1700 ரூபா தருவதாக தெரிவித்தார் வர்த்தமானியும் வெளியிடப்பட்டது ஆனால் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை இவர்கள் அரசியல் செய்து தோட்டத்தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் சட்டவிரோத வியாபாரங்களை பாதுகாத்து கொள்வதற்காகவே இதனை மிக தெளிவாக அண்மையில் அதே கட்சியில் சேர்ந்தவர்கள் ஒருவர் குடு வர்த்தகர் என்கிறார் இன்னொருவர் பார்காரர் என்கிறார் இதன் மூலம் என்ன தெரிகின்றது.

இவர்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்வதற்கும் அவர்கள் சுகபோகமாக வாழ்வதற்குமே அவர்கள் அரசியலில் ஈடுபடுகிறார்கள் இதனை மக்கள் உணர்ந்து ஐக்கிய மக்கள் குரல் கட்சியில் போட்டியிடும் என்னை ஆதரித்தால் நான் நிச்சயம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here