மலையக கூத்து கலைஞர் நடேசன் சாம்பசிவமூர்த்தி காலமானார்!

0
181

கூத்து கலைஞர் நடேசன் சாம்பசிவமூர்த்தி அவர்களின் இழப்பு மலையக கலைத்துறைக்கும் நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்திற்கும் நிகர் சஞ்சிகைக்கும் பேரிழப்பாகும் என நிகர் சஞசிகையின் பிரதம ஆசிரியரும் நிகர் சமூக கலை இலக்கிய அரங்க பிரதம அமைப்பாளருமான அருணாசலம் லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அரங்க கலைஞர் அமரர் நடேசன் சாம்பசிவமூர்த்தி அவர்களது மறைவையொட்டி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அமரர் நடேசன் சாம்பசிவமூர்த்தி நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் தலைவராக எம்மை வழிப்படுத்தியதோடு நிகர் சஞசிகையின் ஆசிரியர் பீட உறுப்பினராகவும் செயற்பட்டவர். அவரின் இழப்பு எம்மில் பெறும் வெற்றிடத்தை காட்டி நிற்கின்றது.
மலையகம் ஓர் உன்னத கலைஞனை இலந்துள்ளது. பாடல் இயற்றுதல் இசையமைப்பு, வாத்திய கலைஞன் என்ற வகையிலும் சிறந்த பாடகராகவும் திகழ்ந்தவர் குறிப்பாக மலையக கூத்து கலைகளுள் முதன்மையானதான காமன் கூத்துக்கலையை நேசித்த ஓர் கலைஞனாக திகழ்ந்தவர்.

செம்மொழி மாநாட்டில் கலைஞர் ஹெலன் தலைமையில் ஒருவராக பங்கேற்றியவர். காமன் கூத்தின் பிரதான பாத்திரமான மதன் பாத்திரத்தை ஏற்று சிறப்பாக பங்காற்றியவர். தேசிய கலை விழாக்களிலும் கணிசமான பங்களிப்பை வழங்கியவர்.
கடந்த வருடம் பிரான்சில் இடம் பெற்ற உலக தமிழ் நாடக விழாவில் நிகர் சமூக கலை இலக்கிய அரங்க கலைஞர்களுள் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தார். துரதிஸ்ட்ட வசமாக விசா அனுமதி மறுப்பின் காரனமாக அந்நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனது.

மலையக அரங்கியல் தொடர்பில் அக்கறை கொண்டு செயலாற்றியதுடன் அது தொடர்பில் அர்;த்தமுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டிருந்தவர். இந்நிழையில் அவரது இழப்பு மலையக அரங்கியல் துறையில் பேரழப்பாக அமைகிறது. மலையக ஆசிரியத்துவத்திலும் தடம் பதித்தி அன்னாரின் இழப்பு மலையக ஆசிரியத்துவத்திலும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் பிரிவால் துயருறும் சகலருடனும் துயர் பகிர்ந்து கொள்வதோடு ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றோம். அன்னாரின் பிரிவால் நிகர் சமூக கலை இலக்கிய அரங்கமும், நிகர் சஞ்சிகையும் பெரியதொரு வெற்றிடத்தை உணர்வதோடு அன்னாரின் உள்ளக்கிடக்கையையும் உணர்ந்த வகையில் அவ் உன்னத கலைஞனின் எண்ணத்தை ஈடேற்ற தயாராக வேண்டிய அவசியத்தை உணர்வதும் அக்கலைஞனுக்கு செய்கின்ற கைமாறாகவும் அமையும்.

பா. திருஞானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here