” மலையக தமிழர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மலையக தமிழர்கள் என்ற அடையாளத்தை நாமே முதலில் அங்கீகரித்தோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் தமது அறிக்கையில் மலையக தமிழர்கள் என விளித்துள்ளார். ஹட்டன் பிரகடனத்தின் பலன் இது.
எமது நாட்டிலுள்ள சட்டக்கட்டமைப்பிலும் இதனை உள்ளடக்க வேண்டும். அதற்குரிய சட்டங்களும் இயற்றப்படும்.
மலையக மக்களுக்கு தமக்கென காணி உரிமை இருக்க வேண்டும். வீட்டு உரமை இருக்க வேண்டும். அது தொடர்பான உறுதிமொழிகள் கட்டங்கட்டமாக நிறைவேற்றப்படும். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.