மலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் ஊவாவில் லுணுகலை பகுதியில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது லுணுகலை பிரதேசத்தில் ஏறத்தாழ பதினெட்டுக்கும் மேற்பட்ட தோட்டங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் முகமாக இக்காரியாலயம் திறக்கப்பட்டதோடு தங்கள் பிரச்சனைகளும் அதோடு அரசியல் முறைப்பாடுகளுக்கான தீர்வினை உடன் வழங்க மலையக மக்கள் முன்னணியும் தொழிற்சங்க பிணக்குகளை தீர்க்க மலையக தொழிலாளர் முன்னணியும் என்றும் உடனிருக்கும் என மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய், மலையக தொழிலாளர் முன்னணியின் உதவி நிர்வாக செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் கட்சி உறுப்பினர் தோட்ட கமிட்டி தலைவர்கள்,தலைவிமார்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த்