மலையக தொழிலாளர் முன்னணியின் புதிய காரியாலயம் சாமிமலையில் திறக்கப்பட்டது.

0
137

மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் புதிய கிளை காரியாலயம் சாமிமலையில் திறந்து வைக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் குறித்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் தாளமுத்து சுதாகரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள், தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here