+மலையக தொடருந்து பாதையில் ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான தொடருந்து போக்குவரத்து இதுவரை வழமைக்கு திரும்பவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தொடருந்து பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக நேற்று (12) பிற்பகல் முதல் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டது.
தடம் புரண்ட தொடருந்து பாதை இதுவரை சீர்செய்யப்பட்டவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் தொடருந்துகள் மற்றும் பதுளையிலிருந்து நானுஓயா வரை பயணிக்கும் தொடருந்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தொடருந்து நிலையங்களுக்கு இடையில் பேரூந்து மூலம் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.