மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

0
192

தடம்புரள்வு காரணமாக தடைபட்ட மலையக புகையிரத சேவைகள் நல்லிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து நேற்று (28) கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற புகையிரதம் ஹட்டன் கொழும்பு பிரதான புகையிரத பாதையில் மாலை 4.15 மணியளவில் ஹட்டனுக்கும் ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது இதனால் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளானதுடன் பயணிகளும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்;

இந்நிலையில் புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து புகையிரத பாதையினை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டதனை தொடர்ந்து நல்லிரவு முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதே நேரம் நேற்று நானுஓயாவில் இருந்து புறப்படவிருந்த இரண்டு புகையிரத பயணங்கள் தடம்புரள்வு காரணமாக இரத்தச்செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here