இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி உள்ள 2018 கல்வி பொது சாதாரணதர பரீட்சைக்கு மலையக பெருந்தோட்ட மாணவர்களும் மும்முறமாக மகிழ்வுடன் கலந்துக் கொண்டதை காணக் கூடியதாக இருந்தது.மலையத்தின் காலநிலை மாணவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதுடன் போக்குவரத்து வசதிகளும் மேற்க் கொள்ளபட்டுள்ளன. பரீட்சை நிலையங்களும் விடைதாள் சேகரிப்பு நிலையங்களும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பிற்கு உள்ளாக்கபட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் இன்று தோட்ட ஆலயங்களில் விஷேட பூஜைகளை நடாத்தி தங்கள் பிள்ளைகளுக்கு ஆசிர்வாதம் அளித்து பரீட்சைக்கு அனுப்பியதை மலையகம் முழுவதும் காணக் கூடியாக இருந்ததுடன் அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட உரவினர்களின் ஆசிகளையும் வாழ்த்துகளையும் பெற்று இந்த மாணவர்கள் தங்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இம்முறை 2018 கல்வி பொது சாதாரணதர பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் கலந்துக் கொள்கின்றமை குறிப்பிடதக்கது.