மலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். கொழும்பு – சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற ”நாம்-200″ நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவரi; இதனைக் குறிப்பிட்டார்;.
இந்திய அரசாங்கம் மலையக மக்களுக்கு வீட்டுத் திட்டம், கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
மலையக மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், கல்வி உள்ளிட்ட அபிவிருத்திக்கான உதவிகளை வழங்கி இந்தியா வழங்கும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார்.