மலையக மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வெற்றி பெற்ற 18 உறுப்பினர்கள் 21.03.2018 அன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் செய்வதையும், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் குழுவாக இருப்பதையும், நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களையும் இங்கு படங்களில் காணலாம்.
(க.கிஷாந்தன், டி.சந்ரூ)