கடந்த 24 மணிநேரத்தில் மலையகத்தின் மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அக்கரபத்தனையிலுள்ள இரண்டு ஆலயங்களில் உள்ள பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம், டயகம பகுதியில் உள்ள ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 4 லட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியான நகைகளும், பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத அதேவேளை, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை குறிப்பிட்டது.